பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.94 திருக்குறள் கதைகள் ஏற்பட்டது முதல் முதலாளி அதே கவலையாகப் படுத்தவர் தான். அவர் உயிர் போயிட்டுது. நீ இந்த மாதிரிச் செய்ததை என்னலே பொறுக்கவே முடியவில்லை. என் மேலே உனக்கு அன்பு இருக்கலாம். ஆனால் அதற்காக இப்படியா செய்ய றது. சே! கோபமும் வெறுப்பும் கலந்த குரலில் பேசினன் நாராயணசாமி. கண்ணம்மா பதில் கூருமல் கண்ணிர் சிந்தியபடியே நின்றுகொண்டிருந்தாள். ஏன் நிக்கறே ? நீ போகலாம். உன்னைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபம்தான் அதிகமாகுது; நீ போய்விடு. இனி உன் சிநேகமே எனக்கு வேண்டாம் ' என்று ஆத்திரத் துடன் சீறினன் அவன். - தெரியாமல் செய்துவிட்ட தப்பு இவ்வளவு விபரீதமா ஆகும்னு நான் நினைக்கவில்லை. என் குற்றத்தை நான் இப்பத்தான் உணர்கிறேன். உங்க மேலே இருந்த அன்பிலே கண்மூடித்தனமா செய்துட்டேன். இனி உங்க விருப்பத் துக்கு மாரு ஒரு நாளும் நடக்கமாட்டேன். நான் திருந் திட்டேன். என்னே நீங்க மன்னிச்சுடுங்க...என்னைக் கை விட்டுவிடாதீங்க. மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல் லுங்க. என்று கதறிக்கொண்டே நாராயணசாமி யின் காலடியில் விழுந்துவிட்டாள் கண்ணம்மா. நாராயண சாமி அவளைத் துளக்கி அணைத்துக் கொண்டான். - உனக்குத் தெரியுமா? முதலாளி மில்லை அப்படியே தொழிலாளர்கள் பேருக்கு எழுதி வெச்சிட்டாரு. இந்த ஸ்டோரை என் பேருக்கு எழுதி வெச்சிருக்காரு. அவர் விரும்பியபடி நான் இந்த ஸ்டோரை எப்பாடு பட்டாவது முன்னுக்குக் கொண்டுவந்து தொழிலாளர் சமூகத்துக்கு உதவி செய்யப்போறேன். அப்பத்தான் அவர் ஆத்மா சாந்தி அடையும் ' என்ருன் அவன். நாராயணசாமியின் சலியாத உழைப்பு, ஊக்கம், முயற்சி காரணமாக அந்த ஸ்டோர் ஒரே வருடத்தில் மிகப் பெரிதாக வளர்ந்துவிட்டது. அதில் கிடைத்த இலாபத்தைக் கொண்டே மேலும் மேலும் அதைப் பலப்படுத்தினன். அவன். கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களில் சிலருக்கு அதில் வேலையும்.போட்டுக்கொடுத்தான். -