பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திருக்குறள் கதைகள் "குழந்தை நல்ல சிவப்பு ! கண்களிலே அறிவின் ஒளி வீசுகிறது. முகத்திலே புத்திக்களை தாண்டவமாடுகிறது. ஆகையால் ரவி என்ற பெயர்தான் மிகவும் பொருத்தமா யிருக்கும்" என்ருர் குழந்தையின் மாமா. தவமிருந்து பெற்ற குழந்தை. அது தீர்க்காயுசாய் வாழவேண்டும். ஆகையால் குழந்தைக்கு முக்குக் குத்தி, குப்பையிலிட்டு, குப்புசாமி எனப் பெயர் வைக்கலாம் ’ என்ருள் குழந்தையின் அத்தை, கடைசியில், ஒருவராலும் ஒரு முடிவுக்கும் வர முடியாமற்போகவே, கிருஷ்ணன் படத்துக்கு முன்னல் விளக்கேற்றி வைத்து, திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்த் தார்கள். - ' கண்ணன் என்ற பெயரே வந்தது. அருமைத் த்ாயின் விருப்பமே ஆண்டவனின் விருப்பமாகவும் இருந்தது. 臺 :k 豪 豪 மாந்தளிர் போன்ற சிவந்த மேனி ; கொழு கொழு? வென்ற உடலமைப்பு: குமிழ்க் கன்னங்கள்: சலனமிடும் விழிகள். நெற்றியிலே தவழ்ந்து விளையாடும் கரு கரு ' வென்ற மிருதுவான வெல்வெட் சுருட்டை மயிர் ! குழந்தை யைக் காண்போர் இது தெய்வக் குழந்தையோ ? என வியக்கும் அதிசயமான தோற்றம். - --- குழந்தைக்கு ஒராண்டு பூர்த்தியாயிற்று. செல்வக் குடும்பத்தில் பிறந்த குழந்தை. அதுவும் தவமிருந்து பெற்ற ஒரே குழந்தை ஆண்டு விழாவின் சிறப்புக்குச் சொல்லவா வேண்டும்.? அது தெய்வக் குழந்தைதான், சந்தேகமில்லை. விக்கிரகம் போன்ற வடிவத்தில் வீடு முழுவதும் தவழ்ந்து விளையாடு வான் கண்ணன். ஆனல் கதவிடுக்கில் கையை வைத்துச் சர்த்திக்கொண்டு அழமாட்டான். தினம் தினம் பால முருகன் படத்தின் எதிரில் போய் உட்கார்ந்துகொண்டு