பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
105


தீமை கருதும் அமைச்சன் ஒருவன் இருந்தால் போதும் அரசனைக் கெடுக்க; பகைவர் பலர் இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். உடன் இருந்து குழிபறிக்கும் குள்ளநரி பொல்லாதது; அவனை அரசன் நீக்கிவிட வேண்டும்.

சிலர் திறம்படத் திட்டம் வகுப்பர்; “சென்று தேய்ந்து இறுதல்” என்ற கொள்கைப்படி போகப் போகத் தொய்ந்து விடுவர்; செயலை முடிக்கமாட்டார்கள். அத்தகையவர் நல்ல அமைச்சராக இருக்க முடியாது.

65. சொல்வன்மை

ஆற்றல் பலவற்றுள்ளும் சொல்லாற்றலுக்கு நிகரானது வேறு எதுவும் இருக்க முடியாது. தான் கூறும் சொல்லால் ஆக்கமும் கேடும் உண்டாகிவிடும்; அதனால் சொல்லில் பிழை நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

சொல்வதனைத் தெளிவாகச் சொல்லித் தமக்கு வேண்டிவர்களைக் கவர வேண்டும்; மாறுபட்டவரையும் தாம் சொல்வதை நிதானமாக ஏற்கச் செய்ய வேண்டும். தாம் சொல்வது சரி என்று எத்தகையவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதற்குத் திறம்படப் பேசுதல் மிகவும் அவசியம்.

நீ தேர்ந்து எடுக்கும் சொல் தக்கதாக இருக்க வேண்டும். அதனைவிட வேறுவிதமாகச் சொல்ல முடியாதபடி அஃது அமைய வேண்டும். “சொல்லாட்சி” திறம்பட அமைவது வெற்றி தரும்.

நீ பிறரிடம் பேசும்போது அவர்கள் கேட்கப் பிரியப் பட வேண்டும்; எளிதாக உணர்த்த வேண்டும். மற்றவர்கள்