பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
120

மிகுதியாக அரசனுக்கு வர வாய்ப்புகள் இருக்க வேண்டும். மிக்க பசியும், தீராத நோய்களும், அழிக்கும் பகையும் சேராமல் இருப்பதே நாடு எனத் தகும்.

நாட்டில் குழப்பம் விளைவிககும் பல்வேறு பிளவுபட்ட கட்சிகளும், பாழ் செய்யும் உட்பகையும், மக்களை அச்சுறுத்தும் வன்முறையாளர்களும் இல்லாமல் இருப்பது தக்கது ஆகும். கொள்ளையர்கள் தொல்லைகள் இருக்கக் கூடாது.

வெள்ளம், புயல், பூகம்பம் முதலிய இயற்கை அழிவுகள் வாராதனவாக அமைய வேண்டும். அப்படி வந்தாலும் அவற்றைத் தாங்கிக் கொள்ளும் வலிமையும், வசதிகளும், வளமும் இருத்தல் வேண்டும்; எதிரிப் படைகள் வந்து அழிவு செய்தாலும் தாக்குப் பிடித்துத் தடுக்கும் வலிமை மிக்க அரணும் அமைய வேண்டும்.

ஆறுகளும் மலைகளும் நாட்டிற்கு எழிலையும் ஏற்றத்தையும் தருவன ஆகும். ஆற்று நீர், ஊற்று நீர் அமைய வேண்டும்; மவைளம் மிக்கு நீர்ப்பெருக்கு உடையதாக இருக்க வேண்டும். மலைவீழ் அருவிகள் ஆறுகளைப் பெருக்கித் தரும்; அத்தகைய மவைளமும் ஊட்டம் தருவதாகும்.

நோய் இன்மை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, பாதுகாப்பு இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு செய்வன ஆகும்.

நாடு என்பது பிற நாட்டினரை எதிர்பாராமல் வாழும் வளம் உடையது. பிறரை ஒவ்வொன்றுக்கும் எதிர் பார்த்தால் அது நாடு என்று கூறமுடியாது; சுய தேவைகளை நிறைவுசெய்ய வேண்டும்.