பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
121


மேற்குறிப்பிட்ட எல்லா வளமும் ஒருங்கு அமைந்து இருந்தாலும் தகுதி உடைய அரசனின் ஆட்சி அமையவில்லை என்றால் பயன் இல்லை. ஆட்சியும் மாட்சி பெற்று இயங்க வேண்டும். நாட்டுக்கு நல்ல தலைவர்களும் தேவை யாகின்றனர்.

75. அரண்
(பாதுகாப்பு)

அரண் இல்லாத நாடு பிறருக்குச் சரண் அடைய வேண்டியதுதான்; போர்மேற் செல்ல வேண்டுமானாலும் அரண் தேவை; அதனைவிடத் தற்காப்புக்கும் அரண் அடிப்படையாகும்.

நீர்நிறைந்த அகழியும், அதனை அடுத்துப் பரந்த வெற்று நிலமும், மலைகளும், செறிவு மிக்க காடுகளும் உடையதே அரண் உடையது என்று கூறப்படும்.

பிறர் ஏற முடியாத அளவு உயரமும், கடக்க முடியாத படி திண்மையும், அணுகுவதற்கு முடியாத அருமையும் பெற்று இருக்கும் மதில்களைக் கொண்டு விளங்க வேண்டும். அதுவே அரண் எனப்படும்.

காவல் இடம் சிறியதாக இருக்க வேண்டும்; அப்பொழுது பிறர் புக முடியாதபடி தடுக்க இயலும்; வாழும் உள்ளிடம் பெரிதாக இருக்க வேண்டும்; பகைவர்கள் ஊக்கத்தை அழிப்பதாக இருக்கும் மதில்களைப் பெற்றிருக்க வேண்டும்.

பகைவர் எளிதில் கொள்ள முடியாததாக நாடு இருக்க வேண்டும்; தாக்குப் பிடிக்கும் அளவுக்கு உணவுப்