பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
133

தேடுவது? அவன் செய்யும் தவறுகள் உன்னையும் பாதிக்கும்; ஏன் அழிக்கவும் செய்துவிடும்; அறிவற்றவனின் தொடர்பு அறவே நீக்குக.

செய்யும் தொழிலைச் செய்யவிடாதபடி தடுத்துக் குறுக்கே நிற்பவரை மெதுவாகக் கழற்றிவிடவும்; எதுவும் விளக்கம் கூறாமல் பற்று அறுத்துக் கொள்க.

சொல்வது ஒன்று, செய்வது வேறு என்று மாறி நடப்பவரின் உறவு தேவை இல்லை; அதனைத்துறப்பதே மேலாகும்.

நேரே தனித்துப் பழகும்போது இனிக்கப் பேசுகிறான்; மன்றத்தில் பலர் முன்னிலையில் கசக்கச் சாடுகிறான்; இந்த முரண்பாடு உடையவன் உனக்கு அரண் ஆக மாட்டான் அவனை அகற்றிவிடு.

83. கூடா நட்பு
(உதவாத நட்பு)

பலரோடு பேசலாம்; சிலரோடு பழகலாம் மிகச் சில தோடுதான் நட்புக்கொள்ள முடியும். வெளுத்தது எல்லாம் பால் ஆகிவிடாது. சேர ஒட்டுவார்கள்; சமயம் பார்த்துக் காலை வெட்டுவார்கள். இவர்கள் கூடா நட்பினர். பாலுக்கும் சுண்ணாம்புக்கும் வேறுபாடு உள்ளது. இவர்கள் சுண்ணாம்பு என்பது, நீரில் போட்ட பிறகுதான் தெரியும். கொதிவந்ததும் தெரிந்துவிடும்.

மிக வேண்டியவன் என்று கூறி வந்து உன்னோடு அண்டிக்கொள்வார். சுரண்ட முடியவில்லை என்றால் புதிய நண்பனைத் தேடி அலைவார்; பொருட்பெண்டிர் மனம் போல இவர்கள் இடம் தாவுவர்.