பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
157


பகைவனாயினும் அவனை நகைத்துப் பேசாதே; விளையாட்டுக்குக் கூட மற்றவர்களை எள்ளிப் பேசி விடாதே, அஃது உன் பண்பைக் கெடுத்துவிடும்.

பண்புடையார் இருப்பதனால்தான் இந்த உலகம் வாழும் தகுதி பெற்றிருக்கிறது; இல்லாவிட்டால் மண் புகுந்து புரையோடிப்போகும். அரம்போலும் கூரிய அறிவு படைத்தவராக இருக்கலாம்; மக்கட் பண்பு இல்லாதவர் மரம் போல்வர் ஆவர்; நல்லுணர்வு அற்றவராகக் கருதப்படுவர்.

பகைவனாக இருந்தாலும் அவனிடம் நகைமுகம் காட்டுவது நற்பண்பு ஆகும்; பண்பு கெட எந்தத் தீமையும் செய்யக்கூடாது. சிரித்துப் பழகுவது சீர்மை பயக்கும்; நகைத்து மகிழ முடியாதவர்க்கு உலகம் பகலாயினும் இருட்டாகத்தான் தெரியும். பண்பு இல்லாதவன் செல்வம் மிகுதியாகப் பெற்றிருந்தாலும் அது பயன்படாது; களிம்பு பொருந்திய கலத்தில் பால் பெய்தால் அது யாருக்கும் பயன்படாது; திரிந்து கெட்டுவிடும்.

101. நன்றியில் செல்வம்

பணம் இருக்கிறது; ஆனால் அவன் அதனை அனுபவிப்பது இல்லை; செத்தவனுக்கும் இவனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

தானும் உண்ணப்போவது இல்லை; பிறர்க்கும் உதவப் போவதும் இல்லை. நன்மைக்குப் பயன்படாத செல்வம்; மதிக்கத்தக்கது அன்று.

பணம்தான் எல்லாம்; அஃது இருந்தால் வேறு எதுவும் தேவையே இல்லை என்ற தவறான கருத்து