பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
158

உடையவர் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முன்வர மாட்டார்கள். அவர்கள் நிலத்துக்குச் சுமை.

இந்தப் பணப்பித்து உனக்கு இருந்தால் பணத்தை நீயே வைத்துக்கொள்; பணம் உடையவன் என்று பெருமை பேசிக்கொண்டே இரு; உதவாக்கரையாக வாழ்ந்து உளுத்துப் போக வேண்டியதுதான்.

இரும்புப் பெட்டியில் இருதயம் வைத்தால் உன் வாழ்வு துருப்பிடித்துத்தான் போகும்; ஈட்டு; அதனை மற்றவர்க்கும் தந்து புகழை நாட்டு; அப்பொழுது அமையும் உன் வாழ்வு மற்றவர்க்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஏனய்யா நீமட்டும் சாப்பிடுகிறாய்? யாருக்கும் தர மாட்டாய்? உன் பின்னால் உன்னைப்பற்றிப் பேசுவதற்கு என்னதான் வைத்துவிட்டுப் போகப் போகிறாய்? கொடுத்தாய் என்று நற்புகழ் உனக்கு நல்லது. ஈக, ஈட்டுக புகழை.

மற்றவருக்கும் கொடு; நீயும் சாப்பிடு. இவை இரண்டும் இல்லையென்றால் அடுக்கிய கோடி உனக்கு இருந்தாலும் உன் வாழ்வு பயன் இல்லை. யாருக்கும் கொடுத்து உதவாத பெருஞ் செல்வம் உனக்கே தீமையை உண்டாக்கிவிடும். உன்னால் பணம் வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது; தீய வழிகளில் செல்ல அவை உன்னைத் தூண்டிவிடும்.

இல்லாதவர்க்கு ஈயாத பெருஞ்செல்வம் அதனால் பயன் யாது? மிகவும் அழகிதான்; இளம் நலம் வாய்ந்தவள் தான்; ஆனாலும் யாருமே அவளை வைத்து வாழவில்லை; பூத்துக் காய்க்காத வாழ்வு; தனியளாக வாழ்ந்து முதிர்ந்து