பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
159

போகிறாள்; அம் முதிர்கன்னி எதனை அனுபவித்தாள்; அந்த கதிதான் உனக்கும்.

ஊர் நடுவே நச்சுமரம் பழுத்து இருக்கிறது; யாருக்கு என்ன நன்மை? அதனிடம் செல்லவே அச்சம் கொள்வர். அதேபோலத்தான் யாரும் நெருங்க முடியாதபடி சேர்த்து வைக்கும் பணம் யாருக்கும் பயன்படாது; பிறரை வாட்டி ஈட்டிய பொருள் அதனை வந்து கொள்ளையடித்துச் செல்வர் அஃது அவனுக்குப் பயன்படாமல் போகும்.

சீர் பெற்ற செல்வம் சிலருக்கு ஏதோ காலக் கேட்டினால் குறைந்து போகலாம்; வருவாய் தடைபட்டிருக்கலாம். அது மழை காலத்தில் பெய்யவில்லை என்பது தான் பொருள்; அந்த வறுமை நிலை நீடித்து இருக்காது; மழை மறுபடியும் பெய்யத்தான் செய்யும்; அவன் வாழ்வு தழைக்காமல் இருக்காது.

102. நாண் உடைமை

நாணம் என்பது மகளிரிடம் எதிர்பார்ப்பது; ஆடவர் முன்வர அவர்கள் வெட்கம் காட்டுவர்; அந்தத் தயக்கம் அவர்களுக்கு அழகு சேர்க்கும். ஆண்களுக்கும் நாணம் வேண்டும். இது பெண் கொள்ளும் நாணத்துக்கு மாறு பட்டது. செய்யும் தொழில் மட்டம்எனில் அதை அணுக அஞ்சுவர்; தாழ்வான தொழிலை அவர்கள் ஏற்க மறுத்து ஒதுங்குவர். இதுவே ஆண்கள்பால் எதிர்பார்க்கப்படும் நாணம், இஃது ஆடவர் மகளிர் இருவருக்கும் தேவையான பண்பு.

உண்ணும் உணவு, உடுத்தும் உடை; ஏனைய வசதிகள் மாந்தர்க்கு அடிப்படைப் பொதுக் தேவைகள்: இவற்றில்