பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
164

அவர்கள் சோம்பலை எள்ளி நகையாடுகிறாள். வியர்வை துளிர்க்க உழைத்தால் பயிர்வகை ஏன் தளிர்க்காமல் போகாது; உயிர் வாழ வழியா இல்லை; உழவுத் தொழில் உயர்வு தரும்.

105. நல்குரவு

வறுமை மிகவும் கொடியது; அதனை விடக் கொடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது.

இல்லாமை என்னும் இந்தப் பாவகாரணி இம்மையும் வரும்; மறுமையும் தொடர்ந்து வரும்.

குடிப் புகழையும் குடிப் பண்பையும் இந்த வறுமை கெடுத்துவிடும்.

நற்குடிப் பிறந்தவரையும் நலிவுறச் செய்வது வறுமை; அவர்தம் சொற்களில் உறுதி நிற்காது; சோர்வு ஏற்படும்.

வறுமைதான் துன்பங்களுக்குத் தாய். எல்லாத் துன்பங்களுக்கும் இதுவே தொடக்கம் என்று கூறுவர்.

நற்பொருளை நன்கு உணர்ந்து சொன்னாலும் அவன் சொற்பொருள் எடுபடாது.

அறம் சாராத வறுமையைத் தாயும் வெறுப்பாள்; அவனை அந்நியனாகக் கருதுவாள்.

நேற்று வந்த நெருப்புப் போன்ற வறுமை இன்றும் வந்து வாட்டுமோ என்ற கவலையை அஃது உண்டாக்குகிறது.