பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4


இத்துறவிகள் ஐம்பொறிகளை அடக்கியவர்கள்: ஆசைகளை விட்டவர்கள்; வானவராலும் மதிக்கப் படுகின்றனர்.

இந்திரன் உயர்பதவி பெற்றவன். அவன் தவம் செய்தவன் என்பதால் உயர் வரங்களைப் பெற்று உயர்ந்தான்; ஆசைகளை நீத்தும், புலன் அடக்கம் கொண்டும் நீண்ட தவம் செய்தால் மற்றவர்களும் அவனைப்போல் உயர் பதவிகள் பெற முடியும்.

இத் துறவிகள் பெருமைக்கு உரியவர்கள்; செயற்கரிய செய்பவர்கள். சிறியவர் அரிய செயல்களை ஆற்றுவது இல்லை. பெருமைக்கும் சிறுமைக்கும் இதுவே வேறுபாடு ஆகும்.

உலகம் அறிவாளியின் கைகளில்தான் இருக்கிறது; அவன் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் ஐந்து உணர்வுகளை நன்கு அறிந்தவன்; அறிவு தெளிந்தவன்; அவன் துறவிகளைப் போலவே மதிக்கப்படுகின்றான்.

சான்றோர்களும் துறவிகளுக்கு நிகரானவர்கள்: அவர்கள் பண்புமிக்க செயலையும், அன்புமிக்க உள்ளத்தையும், அறிவு மிக்க சிந்தனையையும் உலகம் வேதமாக மதிக்கிறது.

இவர்கள் குணம் என்னும் சிகரத்தை எட்டிப் பிடித்தவர்கள்; இவர்கள் சினம் கொண்டால் யாரும் தடுத்து நிறுத்த இயலாது.

அந்தணர்களும் துறவிகளைப் போல மதிக்கத்தக்கவர்கள். அந்தணர் என்போர் அறவோராகத் திகழ்வர்; ஈவு இரக்கம் கொண்டு உயிர்களை நேசித்து அருள் அறம்