பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
177


“குவளை இவளைக் கண்டால் நாணி நிலம் நோக்கு கிறது; இவள் அழகிய கண்களுக்கு நிகராக மாட்டோம் என்று வெட்கப்பட்டு அது தலை சாய்க்கிறது.”

“அனிச்சப் பூவைக் காம்பு களையாமல் சூடிக் கொண்டாள். எடை கூடி விட்டது. இடை சுமக்க முடியாமல் அவளை வருத்தியது.”

‘நட்சத்திரங்கள் தம் வானவெளியில் தம் தலைவனாகிய நிலவைத் தேடின. இவள் முக அழகைக் கண்டு திகைத்து நின்றுவிட்டன. முகம்நிலவு இவற்றிற்கு வேறுபாடே தெரியாமல் கலங்கி நின்றுவிட்டன. பின் அவற்றிற்குத் தெரிந்தது மதிக்கு மறு உண்டு; முகத்துக்கு மறு இல்லை என்பது; அதனால் தம் பதியாகிய நிலவினை அவை அடைந்தன.“

“மாதர் முகம்போல நிலவே நீ ஒளிவிட முயுமா? முடியாது. பேசாமல் ஒளிந்துகொள்; தலைகாட்டாதே. ஒளிவிட முடிந்தால் உன்னை நான் பாராட்டி வாழ்த்துவேன்.”

“மலர் போன்ற கண்ணை உடைய மங்கை நல்லாளின் முகம் போல நீ ஒளிவிட விரும்பினால் நீ பலர் காண வெளியே வராதே; உனக்குப் பாதுகாவல் இருக்காது. பேரழகி என் தலைவி, அவள் முகம் அழகுக்கு நீ ஒவ்வமாட்டாய்; பலர்காண நீ வெளிப்பட்டுத் தோல்வி அடையாதே.

“அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும் மிக மென்மை யானவை; எனினும் அவை என் தலைவியைப் பொறுத்த மட்டில் அவள் பாதங்களுக்கு நெருஞ்சிப் பழம்: முட்களையுடையது நெருஞ்சிப் பழம்.”

12