பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
193


“காற்று இடைப்புகுந்து சிறிது எங்களை வேற்றுமைப் படுத்தியது; அப்பொழுதே என் தலைவியின் கண்கள் பசலை பூத்துவிட்டன.”

“நெற்றியில் வந்து ஒற்றிய பசலையைக் கண்டு கண் வருந்தித் தானும் பசந்துவிட்டது.”


125. நெஞ்சொடு கிளத்தல்

தலைவி கூற்று

“நெஞ்சே இத் துன்பநோயைத் தீர்க்கும் மருந்து நீ அறிந்து சொல்வாயாக!”

“நெஞ்சே! அவருக்கு நம்மிடம் காதல் இல்லை; நீ மட்டும் அவர் பின்னால் சென்றுகொண்டிருக்கிறாய்! நீ என்ன சாதிக்கப் போகிறாய்? சொல்லுக.”

“நெஞ்சே! அவர் வருகையை நினைத்து நீ வருந்திக் கொண்டிருந்தால் ஆகப்போவது என்ன? அவர் இங்கு வரப்போவது இல்லை; நம்மைப்பற்றி அவர் நினைத்து வருந்துவதாகவும் இல்லை.”

“நெஞ்சே! நீமட்டும் அவரிடம் செல்ல எண்ணுகிறாய்; என் கண்கள் அவரைக் காணத் துடிக்கின்றன, அவற்றையும் அழைத்துச் செல்; அவை இங்கே அடம்பிடிக்கின்றன.”

“காதலர் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்று நாம் வெறுத்து ஒதுங்கி வாழ முடியுமா? முடியாது.”

“காதலரைக் காணும்போது பொய்யாகச் சற்று ஊடி நில் என்று கூறினேன்; உன்னால் அவரை விளையாட்டுக்குக்