பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
203


“நீரும் நிழலின்கீழ் இருந்தால் குளிர்ச்சி தரும்: சுவைக்கும்; அதுபோலப் புலவியும் அன்புடையவரிடத்தே தான் இனிமை தரும்.”

தலைவி கூற்று

“ஊடிய பின் அதனை அவர் தீர்த்து வைக்கவில்லை என்றாலும் அவரோடு ஊடுவதற்கு என் நெஞ்சு நாடத்தான் செல்கிறது. அதற்குக் காரணம் கூடுதலில் உள்ள வேட்கையே.”


132. புலவி நுணுக்கம்
(ஊடல் நுட்பம்)

தலைவி கூற்று

“உன் மார்பினை ஏனைய மகளிரும் கண்ணில் கண்டு பொதுவாகச் சுவைக்கின்றனர்; அதனால் அது பரத்தமை பட்டுவிட்டது. அதனால் யான் தழுவ விழையவில்லை.”

“ஊடி இருந்தோம்; அப்பொழுது அவர் சற்றுத் தும்மினார்; நீடுவாழ்க என்று வாழ்த்தினேன்; என்னைப் பேச வைத்துவிட்டார். இஃது அவர் சூழ்ச்சி.”

தலைவன் கூற்று

“பூப்பறித்து வந்து அவள் கூந்தலில் சூட்டினாலும் புலப்பாள்; வேறு ஒருத்தியை மனத்தில் ஒப்புமை கொண்டு அழகை ரசிக்கிறேன் என்று கருதுகிறாள்.”

“மற்ற யாவரையும்விட உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். யாவரையும்விட என்று கூறி