பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
204

விட்டதால் அவள் உடனே ஊடல் கொண்டுவிட்டாள்; ஒப்புமைக்காகக்கூட மற்றொருத்தியைக் குறிப்பிட அவள் சம்மதிக்கவில்லை.”

“இந்த இப் பிறவியில் உன்னைப் பிரியமாட்டேன் என்று கூறினேன்; உடனே கண்களில் நீர் பெருக்கினாள். ‘அடுத்த பிறவி?’ என்பது அவள் வினா.”

“உன்னை நினைத்தேன்’ என்றேன்; மறந்தால்தானே நினைக்க வேண்டி வரும் என்று காரணம் காட்டிக் கலுழத் தொடங்கினாள்.”

“முன்னர்த் தும்மியபோது வாழ்த்தினாள்; அவ்வாறே வாழ்த்துவாள் என்று நினைத்துத் தும்மத் தொடங்கினேன். பிடித்துக்கொண்டாள்; யாரோ உம்மை நினைத்துக் கொள்கிறார்கள்; அதனால்தான் தும்மினிர் என்றாள்.”

“அவளிடத்தில் பணிந்து பேசி ஊடலைத் தணிவிக்க முயன்றேன்; ‘இப்படித் தானே மற்ற மகளிரிடமும் பணிவீர்’ என்று கூறிச் சினந்துகொண்டாள்; அதுவும் ஊடலுக்கு ஒரு காரணம் ஆகிவிட்டது.”

“அவளை நிதானித்து அழகை ரசித்தாலும் காய்கிறாள்; ‘யாரையோ மனத்தில் வைத்து ஒப்புமை காண்கிறீர்’ என்று குற்றம் காண்கிறாள்.”

133. ஊடல் உவகை

தலைவி கூற்று

“அவரிடத்துத் தவறு இல்லை; எனினும் அவர் அன்பைப் பெற ஊடுதல் தேவையாகிறது.”