பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8

வாழ்வு அடைவது குடும்ப வாழ்க்கை; சுமைகளுக்கு அஞ்சி வாழ்வின் சுவைகளை இழப்பவர்கள் துறவிகள்.

அறநூற்படி செம்மையான வாழ்வு நடத்தி வெற்றி பெறுவது அரிய சாதனையேயாகும். மறுமை வாழ்வில் அடையும் சுவர்க்க இன்பங்களை இம் மண்ணுலகில் வாழ்ந்தே பெறமுடியும். துறக்க வாழ்வுக்கு இஃது ஒரு திறவுகோல் என்றும் கூறலாம். துறவைவிட உறவே மேலானது என அறிக.

6. வாழ்க்கைத் துணைநலம்

குடும்ப வாழ்க்கைக்கு உற்ற துணைவியாக இருப்பவள் மனைவி; அவள் எத்தகையவளாக இருக்க வேண்டும்? குடும்பத்தை நடத்துவதற்கு வேண்டிய நற்குண நற்செயல்கள் அவளிடம் அமைதல் வேண்டும்; முக்கியமாக வரவுக்கு ஏற்பச் செலவு செய்பவளாக இருக்க வேண்டும்.

குடும்ப வாழ்க்கையே மனைவியால்தான் சிறப்பு அடைகிறது. கோடிப் பணம் கொண்டுவந்து குவித்தாலும் நாடி அதைச் செம்மைப்படுத்திச் சீராக அமைக்கவல்ல மனைவி இருந்தால்தான் அந்த வீடு இன்பம் கொழிக்கும்; அடங்காப் பிடாரி ஒருத்தி மனைவியாக அமைந்தால் அந்த வீடு குட்டிச்சுவர்தான். பணம் இருந்துமட்டும் பயன் இல்லை. குணம் மிக்க மனைவி இருந்தால்தான் இன்பமாக வாழ முடியும்.

மகளிரிடம் எதிர்பார்க்கப்படும் பண்புகளில் தலையாயது கற்பு என்னும் பொற்பு ஆகும். கற்பு என்பது