பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13


அன்பை யாரும் பூட்டி வைக்க முடியாது; தாம் நேசிப்பவர்கள் படும் துயரம் கண்டு விடும் கண்ணிர் அவர்தம் உண்மையான அன்பைப் புலப்படுத்திவிடுகிறது.

கண்ணிருக்கும் அன்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கண்ணிர் சோககீதம் பாடும்.

அன்புடையர் வஞ்சகமும் கஞ்சத்தனமும் இல்லாதவராக இருப்பர். கேட்டு இல்லை என்று சொல்லி அவர்கள் நா அடக்கம் பெறாது. அன்பில்லாதவர் வன்புடைய நெஞ்சம் உடையவர். பிறருககு ஈவது என்பது அவர்களுக்கு ஒத்து வாராது; இறுகப் பிடித்து மனத்தை இரும்பாக்கிக் கொள்வர். அன்புடையவர் தம் சதையையும் அறுத்துக் கொடுத்து மற்றவர்க்கு வரும் துன்பத்தைப் போக்குவர்.

எலும்பைப் படைத்தவன் அதில் உயிரையும் இணைத்தான்; அவன் மானிடன் என்று கூறப்படுகிறான்; உயிர் உள்ளவன் என்பதை எடுத்துக் காட்டுவது அன்புதான்; அன்பு உயிரின் இயல்பு.

அன்பு ஒரு காந்த சக்தி; அஃது ஆர்வத்தைத் தூண்டும்; நேயத்தை வளர்க்கும்; நட்பை உண்டாக்கும். நட்புக்கே அடிப்படை அன்பைப் புலப்படுத்துதல் எனக் கூறலாம்.

அன்புற்றார் எய்தும் சிறப்பு யாது? அவர்கள் எதனைச் சாதிக்கிறார்கள்? ஏன் அன்பு காட்ட வேண்டும்? இன்பத்துக்கு அடிகோலுவதே அன்புதான். அன்புடையவரே இன்பமாக வாழ்க்கை நடத்த முடியும்.

அறத்திற்குத் துணையாக இருப்பது அன்பு என்று கூறுவர். அவர்களை முற்றும் அறிந்தவர் என்று கூற முடியாது. வீரத்துக்கும் அன்பே துணை செய்கிறது. தாம்