பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26

வைக்கிறது என்றாலும் அதன் படிகள் கடுமையானவை; பிடிப்பு விட்டால் தடுக்கி விழவேண்டியதுதான். ஒழுக்கம் உயர்வு தருவதால் அதனை உயிரினும் மேலாகக் கருதிப் போற்ற வேண்டும்.

ஒழுக்கம் ஒழுக்கம் என்று சொல்லி அறுத்துக்கொண்டு இருக்கிறார்கள்; அலுத்துவிட்டது; ஒழுக்கத்தைக் கை விட்டால் என்ன? விஷப்பரீட்சை செய்யாதே; ஒழுக்கத்தைக் கைவிட்டால் மிகப் பள்ளத்துக்குள் வழுக்கி விழுவாய். உன்னை மீட்பதற்கு எந்த நூல் ஏணியும் பயன்படாது.

குடுமிவைத்த பார்ப்பான் படித்து வைத்த வேதத்தை மறந்தான்; சாத்திரம் கற்ற ஐயன்மார்கள் அதற்காக அவனைச் சாதியில் இருந்து விலக்கவில்லை. “மறுபடியும் படித்துக் கொண்டு வா” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். மறுநாள் நீதியை விட்டு நியதியை மறந்தான்; நல் ஒழுக்கத்தைத் துறுந்தான். அவன் பூணுால் அன்று முதல் களையப்பட்டது.

பழி ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து மீள்வதற்கு வழியே ஏற்படுவதில்லை; வேதத்தை மறந்தாலும் படித்துக் கொள்ளலாம். ஒழுக்கத்தைத் துறந்தால் சரிப்படுத்திக் கொள்ள இயலாது.

அழுக்காறு கொண்டு அதே வேதனையில் ஒருவர் தாம் ஏதும் செய்யாமல் அழிந்துவிடுவதும் உண்டு. அதே போல ஒழுக்கம் தவறியவன் எவனுமே நிலைத்து முன்னேறுவதில்லை; உயர்வு அவனிடம் செல்ல மறுத்துவிடுகிறது.

ஒழுக்கம் உயர்வு தரும்; இழுக்கம் பழியைத் தரும். ஒழுக்கம் உடையவன் சொல்லாலும் சோர்வுபடப் பேச