பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44

களில் எல்லாம் அறம் இருப்பதில்லை. அதனால் உலகுக்கு எந்த நன்மையும் விளையாது.

அருள் உள்ளம் தேவை என்பதற்கு விளக்கம் தேவையா? எளியவர் உன்னை அணுகும்பொழுது நீ இகழ்வுபட அவர் களை நோக்குகிறாய்! வலியார்முன் நீ எப்பொழுதாவது உதவியை நாடி அவரிடம் சென்றிருப்பாய்; அப்பொழுது நீ எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாய்? அதனை நினைத்துப்பார்; கூனிக்குறுகி உன்முன் நிற்கிறானே அவன் பலமுறை எண்ணிப் பார்த்தே வேறுவழியில்லாமல் உன்னை அணுகுகிறான் என்பதை அறிக. பிறர் துன்பம் தீர்ப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை ஆகும்.

26. புலால் மறுத்தல்

தன் உடம்பில் ஊனைப் பெருக்குவதற்குத் தான் பிறிதின் ஊன் உண்பான் என்றால் அவன் எப்படி அருளை ஆள முடியும்?

பொருளைப் போற்றிக் காப்பாற்றாதவன் அதனை இழந்துவிடுவான்; அதுபோல் அருளைப் போற்றி நாடாதவன் அதனை ஆள இயலாது.

ஒன்றன் உடற்சுவை உண்டவரின் மனம் கொலையாளியின் மனம்போல் கொடியதாக இருக்கும்; அத் தகையவரே இச் செயலைச் செய்வர்.

பொருளற்ற செயல் யாது என்றால் கொலை செய்தல்; அறம் அற்ற செயல் யாது எனின் அதன் ஊனைத் தின்பது.