பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
45


உயிர் வாழ்க்கை உயிரைக் கொன்றுதான் அமைய வேண்டும் என்பதனை ஏற்க இயலாது; ஊன் உண்டால் நரகம்தான் கிடைக்கும்.

தின்பதற்காக விலை கொடுத்து வாங்குவார் இல்லை என்றால், அதனைக் கொல்ல எந்த வியாபாரியும் வர மாட்டான்.

ஊன் என்பது பிறிது ஒன்றன் புண் என்று உணர்வாரேயானால் அதனை யாரும் உண்ணமாட்டார்.

குற்றம் நீங்கிய ஞானம் உடையவர்கள் உயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்னமாட்டார்கள்.

நெய் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட ஒன்றன் உயிர் அழித்து உண்ணாமை நல்லது ஆகும்.

புலால் உண்ண மறுக்கும் அருளாளனை எல்லா உயிரும் கைகூப்பித் தொழுது அஞ்சலி செலுத்தும்.

27. தவம்

தனக்கு உற்ற துன்பத்தைத் தாங்கிக்கொள்வதும், பிறர்க்குத் தீமை செய்யாமல் இருப்பதுமே தவமாகும்.

தவம் அதனைச் செய்பவர்க்கே பொருந்துவது ஆகும்; அதில் நாட்டம் இல்லாதவர் தவத்தை மேற்கொள்வது வீணாகும்.

துறவிகளுக்கு உணவு தருவதை அறமாகக் கொண்டு இல்வாழ்க்கையில் இருப்பவர், அதுதான் தம் கடமை