பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
48

அஃது இசைக்கருவி. தோற்றத்தைக் கண்டு எதனையும் முடிவு செய்ய முடியாது. செயலிலும் இவர்கள் தூயராக மாறினால்தான் மதிப்பும் உயர்வும் பெறுவர்.

தாடியும் மொட்டையும் அடித்துக்கொண்டு ஆசை அற்றவன்போல் இவர்கள் நடிக்கிறார்கள்; இவை வெறுங் கோலம்; செயல்கள் அனைத்தும் அலங்கோலம்; இவர்கள் புறஞ்சுவர் கோலம் செய்பவர்கள்; அகம் கருகி வாழ்பவர்கள்.

29. கள்ளமை

வஞ்சித்துப் பொருள் ஈட்டுபவரை இந்த வையகம் தாழ்த்திப் பேசும். அதனால் பிறர் பொருளை வெளவக் கிஞ்சித்தும் நினைக்கக் கூடாது.

கள்ளத்தால் பிறர் பொருளைக் கவருவோம் என்று உள்ளத்தால் நினைப்பதும் தீயது ஆகும்.

களவினால் ஈட்டிய செல்வம் இருப்பது போலக் காட்டும். ஆனால் தீய பழக்கங்களுக்கு அவன் அடிமையாக அதுவும் தீர்ந்துவிடும்.

வஞ்சித்துப் பிறர் பொருளை வாரிக் குவித்துவிடலாம் என்றாலும் அவற்றை அனுபவிக்க இயலாது. துன்பங்கள் தொடர்ந்து வந்து அதனை அனுபவிக்க முடியாமல் செய்துவிடும்.

எவன் அசந்து கிடக்கிறானோ என்று பார்க்கும் கழுகின் பார்வையை உடையவர்கள், மற்றவர்கள் துன்பம் கண்டு உருகுவார்கள் என்று கூறுவதற்கில்லை. பொருள்வேட்கை