பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
72

அறிவுடையவர்கள் எதிர்காலத்தில் வரப்போகும் நன்மை தீமைகளை அறிந்துகொண்டு அதற்கு ஏற்பத் தம்மைத் தகுதி ஆக்கிக்கொள்வர்; சுற்றுப்புறத்தையும் திருத்திக்கொள்வர்; அறிவற்றவர்கள் வருவதை அறிந்து தீமைகளைக் குறைக்கத் திறம் இல்லாதவர்களாக விளங்குவர்.

அஞ்சத்தக்கனவற்றுக்கு அஞ்சித்தான் ஆகவேண்டும்; “எது வந்தாலும் கவலைப்படமாட்டேன்” என்று மிகைபடப் பேசுவது கவைக்கு உதவாது. வருமுன் காப்பவனே அறிவாளி. வந்த பின் சிந்திப்பவன் ஏமாளி. அறிவுடையவன் முன்கூட்டிச் சிந்தித்து அதிர்ச்சிகளைத் தாங்க வழிவகுத்துக் கொள்வான். மற்றவர்கள் வழிவகை தெரியாமல் இருளில் ஆழ்வார்கள்.

அறிவுடையவர் பொருள் இலராயினும் அவர்கள், கலங்காமல் வாழ்வர்; வழிவகை தெரிந்து வாழ அவர்களால் இயலும். அறிவற்றவர்கள் செல்வம் மிக்கு உடையவராயினும் அதனைச் சீராக வைத்துக்கொண்டு வாழமாட்டார்கள்.

44. குற்றங்கடிதல்
(குற்றங்களை நீக்குதல்)

அறிவு அழிவினைத் தடுக்கும் கருவி என்றார். நாம் அழிவதற்குக் காரணமாக இருப்பவை நம்மிடம் நிகழத்தக்க குறைபாடுகளே. அக் குற்றங்களில் குறிப்பிடத் தக்கவை செருக்கு, சினம், காமம் என்று கூறுவர். இவை மூன்றும் நீங்கியவர் பெருமை பெறுவர்.

அரசர்கள் முக்கியமாகத் தவிர்க்க வேண்டியவை ஈயாத உலோபத்தனமும், பொய்யான மான உணர்வும், தேவை