பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
83


படைவீரனின் வேலுக்கு அஞ்சாத யானைகூடச் சேற்றில் அகப்பட்டுக்கொண்டால் சிறு நரிகளும் அதனைச் சூழ்ந்து கொன்றுவிடும்.

காலம், இடம் என்பவை புறப் பரிமாணங்கள்; அவற்றை அனுசரித்தே செயல்பட வேண்டும். சொந்த இடத்தில் எதனையும் சாதிக்க முடியும். பிழைப்புத் தேடி அந்நிய இடத்துக்கும் செல்ல நேரிடலாம்; அஃது ஒருவருக்குச் சாதகமாகவும் அமையலாம். எனவே எந்த இடமும் அவரவர் மேற்கொள்ளும் செயலுக்கு உகந்ததா என்பதை ஆராய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும்.

51. தெரிந்து தெளிதல்
(ஆராய்ந்து தெளிதல்)

ஓர் ஆளை வேலைக்கு அமர்த்த அவன் விவரப் பட்டியலைக் கேட்டுப் பெறுக.

திருட்டுப் புத்தி எப்படி? நாலு பேரை விசாரித்து அறியவும்.

இன்ப வேட்கையனா? பெண்ணைக் கண்டதும் கண்ணைத் திறந்து பார்த்தால் பரவாயில்லை; கண்ணியத் தோடு நடந்துகொள்வானா? இன்பத் துறையில் எளியனா?

தொடை நடுங்கியாக இருந்தால் அவன் எதற்கும் உதவமாட்டான். ‘ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்’ என்று அடிக்கடி கேட்பவனாக இருந்தால் அவனை ஏற்க வேண்டா; கோழையாக இருப்பான்.

தருமத்தில் நம்பிக்கை உள்ளவனா? நல்லது கெட்டது அறிந்து யோக்கியனாக நடந்துகொள்வானா? அதற்குத் தக்க