13. அழுக்காறாமை பிறரை நோக்கிப் பொருமை கொள்ளாமை. ஒழுக்காருக் கொள்க ஒருவன் தன்னெஞ்சத்(து) அழுக்கா(று) இலாத இயல்பு. (ப-உ) ஒருவன்-ஒரு மனிதன், தன் நெஞ்சத்து-தன் மனத்திலே, அழுக்காறு இலாத-பொறாமைஇல்லாத, இயல்பு-நல்ல தன்மையினை, ஒழுக்க ஆறாக-நல்லொழுக்க வழியாக, கொள்க-கொள்வானாக. (க-உ) மனதாலும் பொறாமைப்பட லாகாது. ஒருவன்-எழுவாய் ; கொள்க-பயனிலை. 14. புறங் கூறாமை இல்லாத விடத்துப் பிறரை இகழ்ந்து பேசாமை. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. (ப-உ) (புறங் கூறுபவர்கள்) எதிலார்-பிறருடைய, குற்றம் போல்-குற்றத்தைக் கவனித்தல் போல், தம் குற்றம்-தங்கள் குற்றத்தையும், காண்கிற்பின்-கவனிப்பார்களாயின், மன்னும் உயிர்க்கு-நிலைத்த உயிருக்கு, தீது உண்டோ-வரக்கூடிய துன்பம் ஒன்று உண்டோ ? இல்லை. (க.உ) பிறர் குற்றம்போல் தம் குற்றத்தையும் கவனித்தால் ஒரு தீமையும் வராது. தீது-எழுவாய் ; உண்டோ-பயனிலை. 13
பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/13
Appearance