உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. ஈகை ஏழைகளுக்கு இல்லை என்னாது கொடுத்தல். நல்லா றெனினும் கொளல்தீது மேல்உலகம் இல்லெனினும் ஈதலே நன்று. (ப-உ) கொளல்-பிறரிடமிருந்து ஒன்றை எற்றல், நல் ஆறு எனினும்-மோட்சத்திற்கு உரிய நல்லவழி என்றாலும் கூட, தீது-அது கெட்டதே. (ஏழைக்கு உதவுவதால்) மேல் உலகம்-மோட்சம், இல் எனினும்-இல்லை யென்றாலும்கூட, ஈதலே-கொடுத்தலே, நன்று-நல்லது. (க-உ) ஏற்றல் தாழ்வு , ஈதல் உயர்வு. கொளல்-எழுவாய் ; தீது-பயனிலை. ஈதல்-எழுவாய் ; நன்று-பயனிலை. 18. புகழ் பிறர் கூறும் புகழ்ச்சி. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. (ப-உ) தோன்றின்-உலகில் ஒருவர் மனிதராய்ப் பிறந்தால், புகழொடு தோன்றுக-புகழொடு தோன்றி விளங்குவாராக. அஃது இலார்-அப்புகழ்ச்சி இல்லாதவர்கள், தோன்றலின்-பிறப்பதைக் காட்டிலும், தோன்றாமை-பிறவா திருத்தல், நன்று-நல்லது. (க-உ) உலகில் தோன்றினால், புகழோடு விளங்கவேண்டும். ஒருவர்-தோன்றாமை-எழுவாய் ; தோன்றுக-பயனிலை. தோன்றாமை-எழுவாய் ; நன்று-பயனிலை. 15