உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. வாய்மை மெய் உடையவராய் இருத்தல். புறந்துய்மை நீரான் அமையும் அகந்துய்மை வாய்மையால் காணப்படும். (ப-உ) புறம்தூய்மை-(மனிதர்க்கு) வெளி உடம்பு சுத்தமா யிருத்தல், நீரான்அமையும்-தண்ணீரால் உண்டாகும்.(ஆனால்) அகம்துய்மை-மனம் சுத்தமா யிருத்தல், வாய்மையால்-மெய் உடைமையால், காணப்படும்-உண்டாகும். (க.உ) மெய்யுடைமையால் மனம் சுத்தமாகும். புறந்தூய்மை-எழுவாய் அமையும்-பயனிலை. அகந் தூய்மை-எழுவாய் ; காணப்படும்-பயனிலை. 20. வெகுளாமை கோபம் கொள்ளா திருத்தல். தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். (ப-உ) தன்னைத்தான்-ஒருவன் தன்னைத் தானே, காக்கின்-காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், சினம் காக்கதனக்குக் கோபம் வராமல் காத்துக் கொள்வானாக. காவாக்கால் -அப்படிக் காவாவிட்டால், சினம்-அக்கோபமானது, தன்னையே-அவனையே, கொல்லும்-அழித்துவிடும். (க.உ) கோபம் உடையவர்களை அவர் கோபமே அழித்து விடும். சினம்-எழுவாய் ; கொல்லும்-பயனிலை. 16