23. கல்வி நல்ல புத்தகங்களைப் படித்தல். கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. (ப-உ) (ஒருவன்) கற்பவை-படிக்கத் தகுந்த புத்தகங்களை, கசடு அற-பிழை யில்லாமல், கற்க-படிப்பானாக. கற்றபின்-படித்தபின், அதற்குத்தக-அப்புத்தகங்களில் சொல்லியுள்ள படி, நிற்க-நடப்பானாக. (க.உ) நல்ல புத்தகங்களைப் படித்து அதன்படி நடக்க வேண்டும். . ஒருவன்-தோன்றா எழுவாய் , கற்க, நிற்க-பயனிலைகள். 24. (இதுவும் கல்வியே) எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (ப-உ) எண் என்ப-உலகத்தார் கணக்குப்புத்தகம் என்று சொல்லுவனவும், எனை-மற்றைய, எழுத்து என்ப-எழுத்தாலான புத்தகம் என்று சொல்லுவனவும் ஆகிய, இவ்விரண்டும் - இவ்விருவகைப் புத்தகங்களையும், வாழும் உயிர்க்கு-உலகில் வாழும் உயிர்களுக்கு, கண் என்ப-இரண்டு கண்கள் என்று அறிவுடையோர் சொல்லுவர். (க-உ) எண்ணும் எழுத்தும் இரு கண்களாகும். அறிவுடையோர்-தோன்றா எழுவாய் ; கண் என்ப-பயனிலை. 18
பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/18
Appearance