உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. ஊக்கம் உடைமை ஊக்கம் உடையவராய் இருத்தல். வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய(து) உயர்வு. (ப-உ) மலர் நீட்டம்-நீர்ப் பூக்களின் நீளம், வெள்ளத்து அனைய-அவைகள் இருக்கும் தண்ணிர் ஆழத்தின் அளவாகவே இருக்கும். (அதுபோல) மாந்தர் தம்-மனிதர்களுடைய, உயர்வு -சிறப்பு, உள்ளத்து அனையது-அவருடைய ஊக்கத்தின் அளவாகவே இருக்கும். - (க-உ) ஊக்கத்திற்கு ஏற்றபடியே உயர்வு உண்டாகும். உயர்வு-எழுவாய் உள்ளத்தனையது-பயனிலை. 38. மடியின்மை சோம்பல் இல்லா திருத்தல். நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். (ப-உ) நெடுநீர்-விரைந்து செய்ய வேண்டிய காரியத்தைத் தாமதித்துச் செய்தலும், மறவி-முற்றிலும் மறந்து விடுதலும், மடி-இடைவிடாத சோம்பலும், துயில்-அடிக்கடித் துங்குவதும் ஆகிய, நான்கும்-இந்நான்கும், கெடுநீரார்-கெட்டொழியும் தன்மை உடையார்க்கு உரிய, காமக்கலன்-விருப்பமான ஆபரணமாகும். (கலன்-கப்பல் என்றும் பொருள்). (க.உ) நெடுநீர், மறவி, மடி, துயில் என்னும் நான்கும் உடையவர்கள் கெட்டொழிவார்கள். நான்கும்-எழுவாய் ; கலன்-பயனிலை. 25