39. ஆள் வினை உடைமை இடைவிடாத உடல் முயற்சி உடைமை. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். (ப-உ) முயற்சி-இடைவிடாத உடல் உழைப்பு, திருவினை-செல்வத்தினை, ஆக்கும்-வளர்க்கும். முயற்று இன்மை-அந்த முயற்சி இல்லாமை, இன்மை-தரித்திரத்தை, புகுத்திவிடும்உண்டாக்கி விடும். (க.உ) முயற்சி செல்வத்தைக் கொடுக்கும். முயற்சி-எழுவாய் , ஆக்கும்-பயனிலை. முயற்றின்மை-எழுவாய் புகுத்திவிடும்-பயனிலை. 40. இடுக்கண் அழியாமை துன்பம் வந்தால் மனம் கலங்காமை. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். (ப-உ) வெள்ளத்து அனைய-வெள்ளம் போல் அளவில்லாது வந்த, இடும்பை-துன்பங்களும், அறிவுடையான்-அறிவுடைய ஒருவன், உள்ளத்தின்-தன் மனத்தால், உள்ள-(அத் துன்பங்களேப் போக்கும் வழியைக் கலங்காமல்) நினைக்க, கெடும் -உடனே கெட்டுவிடும். (க.உ) எவ்வளவு பெரிய துன்பங்களையும் மனச் சாந்தியால் நீக்கி விடலாம். இடும்பை-எழுவாய் , கெடும்-பயனிலை. 26
பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/26
Appearance