45. நட்பு ஆராய்தல் சினேகத்திற்கு உரியவர் இன்னார் என்று ஆராய்தல். குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. (ப-உ) (நட்புக் கொள்ள விரும்பும் ஒருவர்) குணனும் தாம் விரும்பும் மற்றொருவருடைய குணத்தையும், குடிமையும்-குடிப் பிறப்பையும், குற்றமும்-செய்யும் குற்றங்களையும், குன்றா இன்னும்-குறையாத கூட்டுறவையும், அறிந்து-ஆராய்ந்து தெரிந்து கொண்டு, நட்பு யாக்க-(அவரோடு) நட்புக் கொள்வாராக. (க.உ) குணம், குடிமை, குற்றம், கூடியுள்ள இனம் என்னும் நான்கையும் அறிந்துகொண்டே, பிறரோடு நட்புக் கொள்ளவேண்டும். ஒருவர்-தோன்ரு எழுவாய் , யாக்க-பயனிலை. 46. தீ நட்பு கெட்ட சினேகிதரின் தன்மை. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. (ப-உ) வினை வேறு-செய்யும் செயல் வேறாகவும், சொல் வேறு பட்டார்-பேசும் பேச்சு வேறாகவும் நடப்பவருடைய, தொடர்பு-சினேகம், கனவினும்-கனவிலுங்கூட, இன்னாது - இன்பம் செய்யாது. (மன், ஓ-அர்த்தம் இல்லாத அசைச் சொற்கள்). (க.உ) சொல்வது ஒரு விதமாயும், செய்வது ஒருவிதமாயும் உள்ளவர் சினேகம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும். தொடர்பு-எழுவாய் ; இன்னாது-பயனிலை. 29
பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/29
Appearance