மாதிரிக் கேள்விகள் 1. திருவள்ளுவரைப்பற்றியும், திருக்குறளைப்பற்றியும் உமக்குத் தெரிந்தவைகளை எழுதுக. 2. ஒப்புரவறிதல், ஆள்வினைஉடைமை என்றால் என்ன ? 3. அழுக்காறாமை, பொச்சாவாமை என்பவைகளைப் பற்றிச் சொல்லும் குறள்கள் யாவை ? 4. “நுனிக் கொம்பர்”, “கடல் ஓடா” என்று தொடங்கும் குறள்களை எழுதி, அவற்றின் அதிகாரப்பெயர்களையும் எழுதுக. 5. “நெடுநீர்”, “கருவியும்” என்று தொடங்கும் குறள் கட்குப் பதவுரை எழுதுக. 6. எமம், வேளாண்மை, என்பு, இடுக்கண், இன்னாது, கிடந்தமை-இவைகட்குப் பொருள் எழுதுக. - 7. “மேல் பிறந்தார்”, “பகல் வெல்லும்” என்ற குறள் கட்குக் கருத்து எழுதுக. 8. “மருந்தேயாயினும் விருந்தோடுண்”, “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” இக்கருத் தமைந்த குறள்களை எழுதுக. 9. அகரம், துலாக்கோல், ஊருணி, காக்கை என்பவைகள் எவற்றிற்கு ஒப்பு ? . . 10. ஆபத்தில் உதவும் நட்புக்கும், நிலையில் தாழ்ந்த மனிதர்க்கும் காட்டப்பட்ட ஒப்பு யாவை ? - - 11. உயிரினும் உயர்ந்ததும், தீயினும் அஞ்ச வேண்டியதும் யாவை ? 12. மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய உதவி யாது ? 13. இவ்விரண்டும், இம்மூன்றும், நான்கும், இவ்வைந்து என்னும் எண்களில் அடங்கியவை யாவை ? 14. மாசற்றார் கோளும், கனவினும் இன்னாததும் இன்னவை என விளக்குக. 15. நட்பாராய்தல் எப்படி ? 16. “அகர முதல” என்னும் குறளுக்கு எழுவாய் பயனிலை கூறுக. 32
பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/32
Appearance