5. விருந்தோம்பல் தம்மிடம் வரும் விருந்தினரை உபசரித்தல். இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (ப-உ) இல் இருந்து-(மனைவி மக்களுடன்) வீட்டில் இருந்து, ஒம்பி-பல பொருள்களையும் தேடிக் காப்பாற்றி, வாழ்வது எல்லாம்-வாழ்ந்து வருவதெல்லாம் எதற்காக என்ருல், விருந்து ஒம்பி-தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரித்து, வேளாண்மை-உதவிகளை, செய்தல் பொருட்டு-செய்யும் பொருட்டேயாம். ఫ్రీ - • (க.உ) குடும்பத்தில் இருப்பவர், விருந்தினரை உபசரிக்க வேண்டியது கடமை. வாழ்வதெல்லாம்-எழுவாய் செய்தற் பொருட்டாம்-பயனிலை. ஆம்-தொக்கி நிற்கின்றது. 6. (இதுவும் விந்தோம்பலே) விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (ப-உ) சாவா-சாவையே உண்டாக்காத, மருந்து எனினும்தேவாமிர்தமாக இருந்தாலுங்கூட, விருந்து-தம்மை நாடிவந்த விருந்தினர், புறத்ததா-வெளியே இருக்க, (அவரை விட்டுவிட்டு) தான் உண்டல்-தான் மட்டும் சாப்பிடுதல், வேண்டல் பாற்று அன்று-விரும்பத்தக்க தன்று. (க-உ) உயர்ந்த உணவானலும், விருந்தினரை விட்டு உண்ணுதல் வெறுக்கத் தக்கதாகும். தான்உண்டல்-எழுவாய் ; வேண்டற் பாற்றன்று-பயனிலை. 9
பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/9
Appearance