உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பியல்

அதிகாரம் 129

புணர்ச்சி விதும்பல்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு 1281

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் திறைய வரின் 1282

பேணாது பெட்பவே செய்யினும் கொண்களைக்
காணாது அமையல கண் 1283

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு 1284

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து 1285

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை 1286

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து 1287

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்ககுக்
கள்ளற்றே கள்வநின் மார்பு 1288

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார் 1289

கண்ணின் துளித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று 1290

263

263