பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

2. துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை. (ப-ரை) துறந்தார்க்கும் - துறவறத்தினை மேற் கொண்ட முனிவர்களுக்கும், துவ்வாதவர்க்கும் - வறியவர் களுக்கும், இறந்தவர்க்கும் - யாருமின்றித் தம்மிடம் வந்து இறந்தவர்களுக்கும், இல் வாழ்வான் - இல்லறத்தில் வாழ் பவன், என்பான் - என்பவன், துணை - துணையாகும்.

(க-ரை) துறந்தவர்களுக்கும், வறுமையாளர்களுக்கும், யாருமின்றித் தன்னிடம் வந்து இறந்தவர்களுக்கும் இல்வாழ்வான் என்பவன் துணையாக இருக்கக் கடவன்.

3. தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான் என்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

(ப-ரை) தென்புலத்தார் - முன்னோர்கள், தெய்வம் . தெய்வம், விருந்து - விருந்தினர், ஒக்கல் . சுற்றத்தார் (உறவினர்), தான் - தான், என்று-என்பதான, ஐம்புலத்து. ஐந்து இடத்திலும் செய்ய வேண்டிய, ஆறு - வழியினை, ஒம்பல் தலை . போற்றிக் காத்துச் செய்தல் தலையாய அறமாகும்.

(க.ரை) முன்னோர்கள், தெய்வம், விருந்து, சுற்றம், தான் என்ற ஐந்திடத்தும் செய்ய வேண்டிய நல்வழியினைப் போற்றிக் காத்து வழுவாமல் நடந்து கொள்ளுதல் சிறப்புடைய அறமாகும்.

4. பழி அஞ்சிப் பாத்துாண் உடைத்தாயின் வாழ்க்கை

வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

(ப-ரை பழி அஞ்சி பழிக்கு அச்சப்பட்டு, பாத்து - பலருக்கும் பகுத்துக் கொடுத்து, உண் - உண்ணும் முறை யினை, வாழ்க்கை இல்வாழ்க்கையானது, உடைத்தாயின்பெற்றிருக்குமானால், வழி எஞ்சல் - அவனுடைய பரம் பரை மறைதல், எஞ்ஞான்றும் இல் எக்காலத்திலும் இல்லையாகும்.