பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 38 அதிகாரம் 43 அறிவுடைமை 42. அறிவு அழிவுவராமல் காக்கும் கருவியாகும் அன்றி பகை கொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத கோட்டையும் ஆகும். 42. மனத்தை அது சென்ற இடங்களில் செல்ல விடாமல், தீமையானவற்றிலிருந்து நீக்கிக் காத்து, நன்மையானவற்றில் மட்டுமே செல்லவிடுவதே அறிவு ஆகும். 423 எப்பொருளை எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப்பொருளின் மெய்யானதன்மைகனைக்காண்பதுவே அறிவாகும். 42. கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும் தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளை ஆராய்ந்து காண்பதுவும் அறிவாகும். 425.உலகத்து உயர்ந்தவர்களைத் தனக்கு நட்பாக்கிக் கொள்வது அறிவு அத்தொடர்வில் முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு ஆகும். 425. உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு வாழ்வதுதான் அறிவுடைமையாகும். 42. அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப் போவதை முன்னதாக எண்ணி அறியவல்லர் அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர். . 42. அஞ்சத்தக்கவற்றைக் கண்டு அஞ்சாதிருப்பது அறிவற்ற தன்மையாகும் அஞ்சவேண்டியவற்றைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவர் செயலாகும். 23. பின்னர் வரப்போவதை முன்னதாகவே அறிந்து காத்துக்கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை. ல், அறிவுடைவர் எல்லா நன்மையுமே உடையவர் ஆவர். அறிவில்லாதவர் வேறு எதனை உடையவரானாலும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.