பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு #02 அதிகாரம் 50 இடன் அறிதல் - பகைவரை முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டயின் அல்லாமல் எந்தச் செயலையும் செய்ய வேண்டா அவருடைய வலிமையை இகழவும் கூடாது. 492 மாறுபாடு பொருந்திய வலிமையுடையவருக்கும் அர ணோடு சேர்ந்திருப்பதால் உண்டாகும் வெற்றி பலவகைப் பயன்களையும் கொடுக்கும். 493, தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவர்களுடன் போராடுதலைச் சிறப்பாகச் செய்தால் அவர்க்கு எதிர் நிற்க ஆற்றாதவரும் வலிமையுடையவராய் வெல்வர். 494. தக்க இடத்தை ஆராய்ந்து அறிந்து பற்றிக் கொண்ட வர்கள் போரையும் நெருங்கிச் செய்வாராயின் அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழப்பர். 495 ஆழமான நீரினுள் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீலிருந்து நீங்கி வ்ந்தால் அந்த முதலையையும் ம்ற்ற உயிர்கள் கொன்று விடும். 496 வலிய சக்கரங்களையுடைய நிலத்தில் ஒடக்கூடிய பெரிய தேர்கள் கடலில் ஒட்முடியாது. கடலில் ஒடும் கப்பல்களும் நிலத்தில் ஒட முடியாது. 49.செய்யவேண்டியவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து தக்க இடத்தில் பொருந்திச் செய்தால் அவருக்கு மனவுறுதியைத் தவிர வேறு துணை வேண்டியதில்லை. - 498 சிறிய படையை உடையவனும் தன் வலிமையைச் செலுத்தக்கூடிய தக்க இடத்தில் பொருந்தி நின்றால் பெரும் படை உடையவனும் தன் முயற்சியில் தோல்வி காண்பான், 499 கடக்க முடியாத அரணும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பண்கவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்கி வெற்றி பெறுதல் அரிது. 500 போர்க்களத்தில் வேலேந்திய வீரரையும் கோத்து எடுத்த கொம்புடைய அஞ்சத யானையையும் அதன் கால் ஆழ்கின்ற சேற்று நிலத்தில் அகப்பட்டபோது சிறுநரிகள் கொன்று விடும்.