பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 128 அதிகாரம் 83 இடுக்கண் அழியாமை 82. துன்பம் வரும்போது அதற்காக மனம் தளராமல் நகைத்து ஒதுக்குக, அதனை நெருங்கி எதிர்த்து வெல்ல வல்லது அதன்ைப் போன்ற சிறந்த வழி வேறு எதுவும் இல்லை. 82. வெள்ளம்போல் அளவற்றதாய்ப் பெருகி வரும் துன்பமும் அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத்துன்பத்தின் இயல்ன்ப நினைத்த அளவில் அவனைவிட்டு மறைந்துபோய்விடும். 823. துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காத மனத்தெளிவு உள்ளவர்கள் அத்துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர். - 524 தடைப்படும் இடங்களில் எல்லாம் தளர்ந்து விடாமல் வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போன்ற விடாமுயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப் படுவதாகும். 625. விடாமல் துன்பங்கள் மேன்மேலும் வந்தாலும் நெஞ்சம் கலங்காதவனுக்கு நேர்ந்த துன்பமானது தானே துன்பப்பட்டு அவனிடமிருந்து விலகிப்போகும். 826. செல்வத்தைப் பெற்றோமே என்று மகிழ்ந்து அதனைப் பாதுகாக்காதவர், வறுமை வந்த காலத்தில் அதை இழந்துவிட்டோம் என்று அல்லற்படுவரோ? 52. இவ்வுடல் துன்பத்திற்கு இலக்கானது என்று உணர்ந்து அதற்குவரும் துன்பங்களுக்கு உள்ளம் கலங்காம்ல் இருப்பவர்கள்ே மேலோர்கள் ஆவர். 528. இன்பம் உண்டாகும்போது அதனை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்தபோது அதனை இயற்கை என்று தெளிந்திருப்பவன் எந்தக் காலத்திலும் துன்பம் அடையமாட்டான். 62. இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை நுகர விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்தகாலத்தில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை. 80. ஒருவன் வினையாற்றுமிடத்து துன்பத்தையே தனக்கு இனபமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் அவனுடைய முயற்சியை விரும்பும் சிறப்புநிலையை அடைவான்.