பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 132 அதிகாரம் 85 சொல்வன்மை 64.நாவன்மையாகியநலம்பெற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். அந்தச் சிறப்பு மற்றெந்தச் சிறப்பினுள்ளும் அடங்குவது அன்று. 642மேன்மையும் கெடுதியும் சொல்கின்ற சொல்லால் வருவதால் சொல்லிலே சோர்வு உண்டாகாதபடி ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். 643. சொல்லும்போது கேட்பவர் உள்ளத்தைத் தன்வயப் படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் செல்லப்படுவதே சிறந்த செல்வன்மை ஆகும். 64. சொல்லின் திறத்தை அறிந்து எந்தச் சொல்லையும் சொல்ல வேண்டும் அத்தகைய சொல்வன்மையைவிட மேலான அறமும் பொருளும் இல்லை. 65. தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக் கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்னரே சொல்லக் கருதியதைச் சொல்லவேண்டும். 846. தாம் சொல்லும்போது பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லும்போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும். 64. தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும்போது சோர்வு இல்லாதவனாய், அவைக்கு அஞ்சாதவ னாய் உள்ள ஒருவனை மாறுபாட்டால் வெல்வது எவர்க்குமே அருமையாகும். 648. கருத்துகளை நிரல்படக் கோத்து இனிமையாகச் சொல்ல வல்லவர்களைப் பெற்றால் இவ்வுலகம் விரைந்து அவர்களுடைய ஏவலைக் கேட்டு நிற்கும். 649. குறையில்லாத சில சொற்களாலே தம் கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே உண்மையாகவ்ே பல சொற்களைச் சொல்லுவதற்கு எப்போதும் விரும்புவர். 850. தாம் கற்ற நூற்பொருளைப் பிறர் உணருமாறு விளக்கிச் சொல்லத் தெரியாதவர் கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்கள் ஆவர்.