பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு $6 அதிகாரம் 67 வினைத் திட்பம் 65. மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது மனவலிமையே யாகும் பிற வலிமைகள் யாவும் வேறானவை. 682, இடையூறு வருவதற்கு முன்பாகவே விலக்கிக் கொள்ளலும், வந்தபின் மனம் தளராமையும் ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம்பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாகும். 563 செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாகச் செய்யும் தகுதியே ஆண்மையாகும் இடையில் வெளிப்பட்டால் அது தீராத துன்பத்தையே விளைவிக்கும். 664. இச்செயலை இப்படியெல்லாம் செய்து முடிக்கலாம். என்று சொல்லுதல் எவர்க்கும் எளியது. சொல்லியபடி செய்து முடித்தல் மிகவும் அரியது. 565, செயல்திறனால் சிறந்த மன உறுதி கொண்டு உயர்ந்தவரின் வினைத் திட்டம் நாடாளும் வேந்தனிடமும் சென்று பதிந்து பலராலும் நன்கு மதிக்கப்படும். 666 ஒரு செயலை எண்ணியவர் தாம் எண்ணியபடியே செயல் ஆற்றுவதிலும் உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தவாறே செய்து ನಿ 667. பரிய தேருக்கு அச்சில் நின்று தாங்கும் சிறிய ான்றவர்கள் உலகில் உள்ளனர்; ஒருவரது உருவத்தின் சிறுமையைக் கண்டு இகழ்தல் கூடாது. 688. மனம் கலங்காமல் ஆராய்ந்து துணிந்து மேற்கொண்ட செயலைச் சோர்வடையாமல், காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு விரைவாகச் செய்து முடிக்க வேண்டும். 889, இறுதியில் இன்பம் பயக்கும் தொழிலைச் செய்யும்போது முதலில் துன்பங்களால் வருத்தம் அடைய நேர்ந்தாலும் அதன்ை மனத்துணிவுடன் செய்து முடிக்க வேண்டும். 60. வேறு எத்தகைய வகையில் உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் மனவுறுதி இல்லாதவரை உலகம் மதியாது. சிறந்தோராகவும் ஏற்காது.