பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு $42 அதிகாரம் 70 மன்னரைச் சேர்ந்தொழுகல் 69. மாறுபடுதலைச் சேர்ந்து வாழ்கின்றவர் அவரை விட்டு மிகவும் நீங்காமலும் மிகவும் அனுகாமலும் நெருப்பில் குளிர் காய்பவரைப் போலப் பழகி வரவேண்டும். 592.மன்னர் விரும்புகின்றவற்றைத் தாம் விரும்பாமலிருந்தால் அவரைச் சார்ந்திருப்பவர்கட்கு அம் மன்னராலே நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும். 893, அமைச்சர் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் பொறுத்தற்கு அரிய தவறுகள் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும் ஐயுற்று அரசன் சினம் கொண்டால் அவரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது. 88. பெரியவர்கள் குழுமியுள்ள அரசவையில் இருக்கும்போது ஒருவன்மற்றொருவனிடம் காதோடு காதாக நெருங்கிப்பேசுதலும், உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுக வேண்டும். 695, அரசர் மறைபொருள் பேசும்போது உற்றுக் கேளாமலும், தொடர்பாக எதுவும் வினவ்ாமலும் இருந்து அவரே அதனைச் சொன்னபோது மட்டிலும் கேட்டறிய வேண்டும். 696.அரசருடைய உள்ளக்குறிப்பை அறிந்து தக்க காலத்தையும் கருத்தில் கொண்டு, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமான வற்றையும் அவர் விரும்பிக் கேட்குமாறு சொல்ல வேண்டும். 591. அரசர் விரும்புகின்றவற்றை மட்டிலும் அவரிடம் சொல்லியனில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும் எப்போதும் சொல்லாமல் கைவிடுதலும் வேண்டும். 898, இளையர் எனக் கருதியோ இன்னமுறை எனக் கருதியோ இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடந்து கொள்ள வேண்டும். 599.அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர்தாம் அரசரால் விருப்பப் பட்டவராகக் கருதிக்கொண்டு அவர் விரும்பாத செயல்களைச் செயயமாட்டார்கள். 700. யாம் அரசர்க்கு மிகப் பழைய காலத் தொடர்புடையோம் என நினைத்துத் தகுதி அல்லாதனவற்றைச் செய்பவனின் நெருக்கமான உரிமை அவனுக்கே கேட்டை விளைவிக்கும்.