பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 146 அதிகாரம் 72 அவை அறிதல் :t. சொற்களின் தொகைபற்றி அறிந்த துய அறிவுடையவர்கள் அளவுக்களத்தின் தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து செல்வாராக, 712 சொற்களின் நடையை ஆராய்ந்தறிந்த நல்லறிவுடை யவர்கள் தாமிருக்கும் அவையின் செவ்வியைத் தெரிந்து, செல்லவேண்டிய்வற்றை நன்கு உணர்ந்து சொல்ல வேண்டும். 73. அவையின் தன்மையை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்ளுகின்றவர் சொற்களின் வகையை அறியாதவர்கள்: அவர் சொல்ல வல்லதும் ஒன்றும் இல்லை. 14. அறிவினால் ஒளியுடையவரின் முன்பாகத் தாமும் அறிவிற் சிறந்தவராய்ப் பேசுதல் வேண்டும் அறிவில்லாதவர் முன் தாமும் அறிவில்லாதவர்போல் இருந்து கொள்ள வேண்டும். 75. அறிவு மிகுந்தவர்கள் குழுமியுள்ள அவையில் தாம் முந்திச் சென்று பேசாத அடக்கம், ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை அனைத்திலும் சிறந்தது. 1ே6 விரிந்த அறிவு நுட்பங்களை அறிந்து உணர்கின்றவர் களின்முன் சென்று பேசிக் குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலை தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும். .* 7 குற்றமறச் சொற்களை ஆராய்வதில் வல்ல அறிஞரிடத்தில், பல நூல்களையும் கற்றறிந்தவரின் கல்வியறிவு மேலும் விளக்கம் பெற்றுத் தோன்றும் 18. தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன்பாகக் கற்றவர் ஒன்றைச் சொல்லுதல் தானாக வளரும் ப்யிருள்ள பாத்தியினுள்ளே நீர் சொரிந்தாற்போன்றது. 19. நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளை நன்கு மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர்கள் அறிவற்றவரின் கூட்டத்தில் மறந்தும் பேசதிருக்க வேண்டும். 20. நல்லார் தம் இனத்தவர் அல்லாதவரின் கூட்டத்தின் முன் ஒரு பொருள்பற்றிப் பேசுதல் துய்மையில்லாத முற்றத்தின் கண் சிந்திய அமிழ்தம் போன்றது.