பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 348 அதிகாரம் 73 அவை அஞ்சாமை 21. சொற்களின் தொகைப்பற்றி நன்கு அறிந்த துய அறிவுடையவர்கள் அவையின் தன்மையை அறிந்து வல்லவரின் அவையில் அச்சத்தால் வாய்சோர்ந்து பிழைபடப்பேசமட்டார்கள். 22. கற்றவரின்முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவர் என்று மதித்துப் புகழப்படுவர். 23. பகைவர் உள்ள போர்க்களத்தில் அஞ்சாமல் சென்று காகத் துணிந்தவர்கள் உலகில் பலர், ஆனால் கற்றோர் அவைக் களத்தில் அஞ்சமல் துணிவாகப் பேசவல்லவர்கள் சிலரே. 724. ಶ್ಗ தாம் கற்றவற்றை அவர்கள் மனம் கொள்ளும்படியாகச் சொல்லி மிகுதியாகக் கற்றவர்களிடம் தாமும் மிகுதியான கல்வியை அறிந்து கொள்ள வேண்டும். 25. அவையில் எழும் வினாக்களுக்கு அஞ்சாமல் விடை யளிக்கும்பொருட்டு நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும். 26 அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு அவர் ஏந்தியுள்ள வாளினால் என்ன பயன்? நுட்பமான அறிவுடையவர்களின் அவைக்கு அஞ்சுபவர்கட்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு? 2ே1. அவையினிடத்தில் நின்று அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது. 28. நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைக் கேட்பவர் மனம் ஏற்றுக்கொள்ளும் வகையில்சொல்ல முடியாதவர் பலவகையான நூல்களைக் கற்றவராயினும் பயன் இல்லாதவரே. 129.நல்ல நூல்களைக் கற்றறிந்திருந்தாலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர் கல்லாதவரைவிடக் கடைப்பட்டவர்கள் எனறு கூறுவா, - 130. அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவற்றைக் கேட்பவர் மனம் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்துக் கூற முடியாதவர் உயிர்வாழ்கின்றவராயினும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.