பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு #50 அதிகாரம் 74 நாடு 13. குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும்கேடில்லாத செல்வம் உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே நல்ல நாடாகும். 132 மிக்க பொருள் உடையதாயும், அனைவராலும் விரும்பத் தக்கதாயும், கேடுகள் இல்லாததாயும் மிகுதியான விளைபொருள் உள்ளதாயும் திகழ்வதே நல்ல நாடாகும். 733. வேற்று நாட்டு மக்கள் குடியேறுவதில் சுமை ஒருசேரத் தன்மேல் வரும்போது தாங்கியும் தன் அரசனுக்குரிய திறைப் பொருள் முழுவதும் தரவல்லதுமானதே நல்ல நாடு. 34. மிக்க பசியும் ஓயாத நோயும் வெளியிலிருந்து வந்து தாக்கி அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் இனிதாக நடைபெறுவதே நல்ல நாடாகும். 135. பலவகையாகப் பிரிந்து இயங்கும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், வேந்தனை வருத்துகின்ற கொலை வெறியுள்ள குறுநில மன்னரும் இல்லாததே நல்ல நாடு. 36. பகைவரால் கெடுக்கப் படாததாயும் இயற்கையின் மாறுபாடுகளால் கெட்டவிடத்தும் வளம் குன்றாததாயும் உள்ள நடுதன் நா சிறந்த நாடு. 15. ஊற்று நீரும் மழைநீரும் ஆகிய இருவகை நீர் வளமும், தக்கவாறு வளமாய் அமைந்த மலையும், அந்த மலையிலிருந்து இழியும் ஆற்றுநீர் வளமும், வலிய அரனும் நாட்டிற்குகந்த் நல்லுறுப்புகளாகும். 138 மக்கள் நோயில்லாதிருத்தல், செல்வம் உடைமை, விளைபெருள் பெருக்கம், இன்பம் தரும் கவின்கலைகள். நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர். 139 முயற்சிசெய்து வருந்தித் தேடாமல் தரும் வளத்தையுடைய நடே நல்ல நாடு என்பர் தேடி முயன்றால் வளம் தரும் நாடு சிறந்த நாடு ஆகாது. 10. மேற்கூறிய எல்லாம் சிறப்பாக அமைந்திருந்த போதிலும் ஆட்சிபுரியும் அரசன் பொருத்தமில்லாமல் இருந்தால் அந்த நாடு பயனற்ற நாடாகும்.