பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 5 அதிகாரம் 76 பொருள் செயல் வகை 751 ஒரு பொருளாக மதிப்பதற்குத் தகுதியல்லாதவரையும் பிறர் மதிக்கும்படியாகச் செய்யக்கூடிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை. 152. பொருள் இல்லாத வறியரை வேறு நன்மை பெற்றிருந்த போதிலும் எல்லாரும் இகழ்வர் பொருள் உடையவரையோ (எல்லாத் தீமையும் உடையவராயினும் சிறப்புச் செய்து போற்றுவர். 753 பொருள் என்று கூறப்பெறும் நந்த விளக்கு தன்னை உடையவர் எண்ணிய தேயங்களுக்குச் சென்று அவர் பகையாகிய இருளைப் போக்கும் ஆற்றல் உடையது. - 154 தீமை ஒன்றும் இல்லாமல் பொருள் தேடும் திறம் அறிந்து வந்தடைந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும்இன்பத்தை யும் ஒருங்கே கொடுக்கும். 155. அருளோடும் அன்போடும் பொருந்தி வராத வழிகளில் பந்தடைந்த பொருட் பெருக்கத்தைத் தீமையானது என்று விலக்கி விடவேண்டும். 756, உடையவர் இல்லாததாலே வந்து சேரும் பொருளும், சுங்க வரியாக வந்து சேரும் பொருளும் பகைவரை வென்று திறையாகப் பெறும் பொருளும் வேந்தனின் உரிமைப் பொருளாகும். 15. அன்பு என்னும் அன்னை பெற்றெடுத்த அருள் என்று கூறப்பெறும் குழந்தை பொருள் என்று கூறப்பெறும் செல்வம் படைத்த செவிலித் தாயால் வளர்வதாகும். 358. தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு.ஒருவன் ஒரு செயலை ஆற்றத் தொடங்குதல் ஒரு குன்றின்மீது ஏறிநின்றியானைப்போனிக்கண்டற்போன்றதாகும். :59, ஒருவன் எப்போதும் பொருளைத் தேடி ஈட்டவேண்டும். அவனுடைய பகைவரின் செருக்கை அழிக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை. 160. நல்ல வழியில் சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒருங்கே வந்து வாய்க்கும் எளிய பொருள்களாகும்.