பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 密8 அதிகாரம் 78 படைச்செருக்கு 77. பகைவரே என் தலைவனின் முன்னே எதிர்த்து நிற்காதீர் அவன் முன் எதிர்த்து நின்று களத்தில் வேலால் வீழ்ந்து பட்டு, நடுகற்கள்ாய் நிற்பவர் மிகப் பலர். 72. காட்டு முயலைக் குறி தவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்ன்ப ஏந்துதலைவிட வெட்ட வெளியில் நின்ற யானைமீது எறிந்து குறி தவறிய வேலினை ஏந்துதல் சிறந்தது. 73. பகைவரை அஞ்சாமல் எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர். அப்பகைவருக்கு ஒரு கேடு வந்த விடத்து உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்ம்ை என்று 鑫Qj事。 74. கையில் ஏந்திய வேலை தன்னை எதிர்த்து வந்த யானையின்மீது எறிந்து அதன் உயிரைப் போக்கி விட்டு ఛ్ வேல் தேடி விருகின்றவன் தன் மார்பில் தைத்திருந்த பகைவரின் வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான். 75. பகைவரைச் சினந்து நோக்கிய கண் அவர் தம் கைவேலை எறிந்தபோதும் அந்நோக்கை அழித்து இமைக்கு மானாலும் அது வீரமுள்ளவருக்குத் தோல்வி அல்ல்வோ? 76. கழிந்து ப்ோன நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை யெல்லாம் பயன்படாமல் தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே சிறந்த வீரன். - 77. உலகைச் சூழ்ந்து பரந்து நிற்கும் புகழை விரும்பி உயிர் வாழ்தலையும் விரும்பாத ஆண்மையுள்ள வீரரின் காலில் விள்ங்கும் வீரக்கழல்களே அழகுசெய்யும் தன்மையுடையனவாகும். 78.போர்நேரிட்டால்தம் உயிருக்கும் அஞ்சாமல் போர்புரியும் வீரர்கள் தம் அரசனே தடுத்தாலும் திம்முடைய மனவூக்கத்தில் சிறிதும் குன்றாதவர் ஆவர். 19. தாம் உரைத்த சூளுரையிலிருந்து தவறாமல் போர்செய்து சாகத் துணிந்தவரை எவர்தாம் சூளுரை பிழைத்தற்காகத் தண்டிக்க வல்லவர்? 180. தம்மைப் பேணியவரின் கண்கள் நீர் பெருக்குமாறு சாகப்பெற்றால், சாவு ஒருவன் இரந்தும் பெற்றுக்கொள்ளத்தக்க சிறப்பினை உடையதாகும். -