பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு j62 அதிகாரம் 80 நட்டாராய்தல் 79. நன்றாக ஆராயாமல் நட்புச் செய்தலைவிடக் கெடுதி எதுவும் இல்லை.அப்படி நட்புச்செய்த பிறகுநட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை. 192. பலவகையாலும் ஒருவனை ஆராய்ந்து தெளிந்தபின் கொள்ளாதவனுடைய நட்பு இறுதியில் தானே சாவதற்குக் காரணமான துயரத்தைப் பயந்து விடும். 18. ஒருவனுடைய குணத்தையும், அவன் பிறந்த குடியின் சிறப்பையும்அவ்ன் குற்றங்குறைகளையும், நிலையாக இருக்கும் தோழர்களையும் அறிந்தே நட்புக் கொள்ள வேண்டும். 794, உயர்ந்த குடியில் பிறந்தவனும், தன்னிடத்தில் வரக் கூடிய பழிக்குநாணப்ப்டுகின்றவனும் ஆகிய ஒருவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ள வேண்டும். 195. நன்மையற்ற செயலைக் கண்டபோது வருந்தும்படியாக இடித்து உரைத்தும், மேலும் செய்யாதபடி தடுத்தும் உலகநடைமுறையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ந்து கொள்ள வேண்டும். 196. ஒருவனுக்குக் கேடு வந்தவிடத்தும் ஒருவகை நன்மை உண்டு, அது நண்பரின் இயல்புகளை அளந்து அறிந்து கொள்ள உதவும் அளவு கோலாக அமையும். 19 ஒருவனுக்கு நற்பேறு என்பது யாதெனில் அவன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும். - 198. நண்பனைக் குறித்து ஊக்கம் குறைவதற்குக் காரண மான செயல்களை எண்ணாமல் இருத்தல் வேண்டும் அதுபோல் iன்பம் வந்துற்றபோது கைவிடுகின்றவரின் நட்பையும் கொள்ள ருத்தல் வேண்டும். 199, கேடு வருங்காலத்தில் கைவிட்டு ஒதுங்கிப் போகின்ற வரின் நட்பு ஒருவன் சாகின்ற காலத்தில் நின்ைத்தாலும் உள்ளம் வேதனையால் எரியும். 800. குற்றமற்ற நல்லோர்களின் நட்பையே கொள்ளவேண்டும்: ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பினை ஒன்றைக் கொடுத்தாவது கைவிடுதல் வேண்டும்.