பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு #68 அதிகாரம் 83 கூட நட்பு 82. உள்ளத்தால் நெருக்கமில்லாமல் புறத்தில் மட்டும் பொருந்தி நடப்பவரது நட்பு தக்க இடம் கண்டபோது எறிவதற்கு மறைந்துள்ள பட்டடை போன்றதாகும். - 822 தம் இனத்தார்போல் உறவு காட்டி, உண்மையில் உள்ளத்தில் தம் இனம் அல்லாத கீழோரின் நட்பு பொதுமகளி ரின் மனம்போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும். 83. பல நல்ல நூல்களை எல்லாம் கற்றுத் தேர்ந்தபோதிலும், அவற்றின்பயனாக நல்ல பண்பினராகப் பழகுதல் உள்ளன்பினால் மாட்சிமை யில்லாதாருக்கு அரிது. 84. முகத்தில் இனிமை தோன்ற நகைத்துப் பழகினபோதும் அகத்திலே தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு அஞ்ச வேண்டும். 825. மனத்தினால் தம்மொடு நெருக்கம் கொள்ளாமல் பழகு கின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக்கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நண்பராகத் தெளிது கொள்ளல் ஆகாது. 826. தம்மிடம் பேசும்போது நண்பர்போல் தகுதியானவற்றைச் சொன்னாலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும். 82. வில்லின் வளைவு தீங்கு செய்தலையே குறியாகக் கொண்டதே இவ்வாறே பகைவரிடத்திருந்து வரும் வணக்கமான பேச்சையும் தீமை தரும் என்று தள்ளி விடவேண்டும். 828. பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக் கருவி மறைக்கப்பெற்றிருக்கும். பகைவர் அழுது சொரியும் கண்ணீரும் அத்தன்மையானதே. 829. வெளிப்பட மிகுதியாக நட்புத்தோன்றச் செய்து உள்ளத்தில் இகழ்கின்றவர்களைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பை அழித்துவிடவேண்டும். 80. பகைவரும் நண்பராகும் காலம் வருங்கால் முகத்தளவில் அவரிடம் நட்புக் கொண்டு அகத்தில் போற்றாது வாய்ப்புக் கிடைத்தபோது அதையும் நீக்கிவிடவேண்டும்.