பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 170 ឧៈ 84 பேதைமை 83 பேதைமை என்று சொல்லப்படுவது யாதென்றால், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக் கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதலாகும். 832. பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது. தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் விருப்பம் கொள்ளுதல் ஆகும். 85. தக்ாதவற்றிற்கு நாணாதிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், கண்ணோட்டம் இல்லாதிருத்தல், எதனையும் பேனிக் காவாதிருத்தல் ஆகியவை பேதையர்து தொழிலாகும். 834 நூல்களை முறையாக ஓதி உணர்ந்தும், பிறருக்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அட்ங்கி ஒழுங்த பேதைபோல் வேறு பேதையர் இவ்வுலகில் இலர். 835 ஏழு பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தை பேதை தன் இந்த ஒரு பிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான், - 838, செய்யும் நெறி அறியாத பேதை ஒரு செயலை மேற்கொண்டால், அது பொய்யாகிப் போவதுடன் அவனும் குற்றவாளியாகித் தளை பூண்கின்ற துயரத்தை அடைவான். 83.பேதை முன்வினைப்பயனால் பெருஞ்செல்வம் அடைந்த போது அவனோடு தொடர்பில்லாத அபலார் பலரும் நிறைந்த நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர். 38. பேதை ஒருபொருளை உடைமையாகப் பெற்றால் அவனது நிலைமை பித்துப்பிடித்த ஒருவன்கள் குடித்து மயங்கினாற் போலாகும். - 859 பேதையரிடமிருந்து பிரிவு நேரிடும்போது அப்பிரிவுத் துன்பம் ஒன்றும் விளைவிப்பதில்லை, ஆகையால் ஒரு வகையில் பேதையருடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமை பயப்பதாகும். 840. சான்றோர் கூட்டத்தில் ஒரு பேதை புகுதல் ஒருவன் துய்மையற்றவற்றை மிதித்துக் கழுவித் துப்புரவு செய்யாத காலைப் படுக்கையில் வைத்தலைப் போன்றது.