பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு #72 அதிகாரம் 85 புல்லறிவான்மை 841. அறிவில்லாத தன்மையே வறுமையுள் கொடிய வறுமை, பொருளில்லாத மற்ற வறுமைகளை உலகம் அத்தகைய வறுமையாகக் கருதிாது. ரு 影 அறிவில்லாத ஒருவன் மன மகிழ்ச்சியுடன் ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறு ஒன்றும் இல்ல்ல் அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையேயாகும். 83. அறிவில்லாதவர் தமக்குத் தாமே செய்துகொள்ளும் வருத்தம் தரக்கூடிய துன்பங்கள் அவருடைய பகைவராலும் அவருக்குச் செய்யமுடியாத அளவினதாகும். 84. புல்லறிவு என்று சொல்லப்படுவதுயாது என்றால், அஃது அறிவில்லாதவனும் தான் அறிவுடையவன் என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும். 85. அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர்போல் மேற்கொண்டு நடத்தல் அவர் பழுதறக் கற்றுணர்ந்த பொருளைப்பற்றியும் மற்றவர்க்கு ஐயத்தை விள்ளவிக்கும். 86. தம்மிடத்திலுள்ள குற்றத்தை அறிந்து நீக்காதபோது தம் மரும் உறுப்புகளை மட்டும் மறைத்துக் கொள்ளுதல் அறிவற்ற தன்மையாகும். 81. அரிய மறைப்பொருளைப் பெற்றாலும் அவற்றை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத்தானே பெருந்தீங்கு இழைத்துக் கொள்வான். 848 பிறர் ஏவினாலும் தனக்கு நன்மையானவற்றைச் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவ்னாய் உள்ளவன் உயிர்போகுமளவும் பிறர்க்கு ஒரு நோய் போன்றவன், 849. அறிவில்லாதவனை அறிவுடையவனக்க முயல்வேசன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான் அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான். 850, உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன் உலகத்தில் காணப்பெறும் ஒரு பேயாகக் கருதி விலக்கி வைக்கப்பெறுவான்.