பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 174 அதிகாரம் 86 இகல் 85. எல்லா உயிர்களுக்கும் பிற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீய பண்பை வளர்க்கும் நோய் இகல் மாறுபாடு என்று பெரியோர்கள் கூறுவர். 352. ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி வெறுக்கக்கூடியனவற்றைச் செய்தானாயினும், தான் அவனோடு மாறுபடுதலைக் குறித்து அவனுக்குத் துன்பம் செய்யாதிருப்பதே உயர்ந்தது 853. ஒருவன் மாறுபாடு என்னும் துன்பம் செய்யும் நோயை மனத்திலிருந்து நீக்கி விட்டால் அஃது அவனுக்கு எந்தக் காலத்திலும் அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும். 854. மாறுபாடு இகல் என்னும் துன்பங்களுள் கொடிதான துன்பம் கெட்டொழிந்தால் அஃது ஒருவனுக்கு இன்பங்களுள் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும். 85. தம் உள்ளத்தில் மாறுபாடு தோன்றும்பொழுது அதனை ஏற்றுக் கொள்ளாமல் அதன் எதிரே சாய்ந்து ஒழுகவல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றலுடையோர் எவரும்ே இலர். 855, மறுபாடு கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய உயிர்வாழ்க்கை தவறிப் போதலும் அழிதலும் சிறுபொழுதிற்குள் நிகழ்ந்து விடும். 85. மாறுபாட்டை விரும்புகின்ற திய அறிவையுடையவர் வெற்றி பொருந்துதலையுட்ைஸ் நீதி நூல்களின் பொருள்களை ஒருபோதும் உணர்ந்து அறியமாட்டார்கள். 858. தன் உள்ளத்தில் மாறுபாடு தோன்றியபோது அதனை எழாமல் தடுத்துக் கொள்ளுதலே ஆக்கம் தருவதாகும். அதனை எதிர்த்து வெல்லக் கருதினால் அவனுக்குக் கேடு வந்து சேரும். 859, ஒருவன் தனக்கு நற்காலம் வரும்போது காரணம் இருந்தாலும் இகலைக் கருதின் அவன் தனக்குக் షీధ காலம் வரும்போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான். 850 மாறுபாடு என்னும் ஒன்றினால் துன்பமானவை எல்லாம் உண்டாகும் அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.